பொதுவாகவே வெளிநாட்டு பறவைகள், சில குறிப்பிட்ட நாட்களில் மற்ற இடங்களுக்கு வலசை செல்வதுண்டு. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில், இன்று காலையில் அரியவகை ஆந்தை ஒன்று திடீரென்று கீழே விழுந்து கிடந்துள்ளது.
இந்த பறவையை பார்ப்பதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அந்த பறவை பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில், சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் அந்த ஆந்தையை மீட்டு, ஆந்தையை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
வனத்துறையினர் தகவல் அளிக்கப்பட்டு வெகு நேரத்திற்கு பிறகு வந்து அதை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். இது ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை பறவை என்றும், மற்ற பறவைகளால் இது தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…