மக்கள் தலைகீழாக மாற்றி உள்ளனர்- முதலமைச்சர் பழனிசாமி

- திமுக கனவை மக்கள் தலைகீழாக மாற்றி உள்ளனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.அப்பொழுது சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார் .அவர் பேசுகையில் ,நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று திமுக கனவு கண்டது. ஆனால் அந்த கனவை மக்கள் தலைகீழாக மாற்றி உள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.அதேபோல் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.