காங்கிரசுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் – எச்.ராஜா
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே காட்டுகிறது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதால் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரசுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றினால்தான் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.