இத்தனை உயிர்களை காவு கொடுத்த பிறகுதான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என சசிகலா கேள்வி.
விழுப்புரம் மற்றும் செங்கல் பாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகதஹி உலுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கழல்சாராய விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திமுக தலைமையிலான அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் இரண்டே நாட்களில் இதுவரை 17 உயிர்கள் கள்ளச்சாராயம் என்ற அரக்கனுக்கு பலியாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசு இன்றைக்கு காவல்துறையினர் சிலர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல்துறை இதுநாள் வரை தூங்கி கொண்டு இருந்ததா? இத்தனை உயிர்களை காவு கொடுத்த பிறகுதான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மிகவும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
ஒரு சில காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதுமா? திமுக தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, இன்றைக்கு அப்பாவி உயிர்கள் போனபிறகு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்வது யாரை ஏமாற்றும் செயல்? இதுபோன்ற சமூக விரோத செயல்களில் திமுகவினரும் இருப்பதாக தெரியவருகிறது. எனவே, இது போன்ற நாடகங்களை மக்கள் ரசிக்கமாட்டார்கள்.
தமிழக மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிடமுடியாது என்பதை திமுகவினர் இனிமேலாவது புரிந்துகொண்டு மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுங்கள். அதுதான் வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற நன்றிக் கடனாக அமையும்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களை மேலும் மேலும் துன்புறுத்துவதை விட்டு விட்டு, இனிமேலாவது அவர்களின் நலனுக்காக பாடுபடுங்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…