இது போன்ற நாடகங்களை மக்கள் ரசிக்கமாட்டார்கள் – சசிகலா

Sasikala

இத்தனை உயிர்களை காவு கொடுத்த பிறகுதான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என சசிகலா கேள்வி. 

விழுப்புரம் மற்றும் செங்கல் பாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகதஹி உலுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கழல்சாராய விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  திமுக தலைமையிலான அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் இரண்டே நாட்களில் இதுவரை 17 உயிர்கள் கள்ளச்சாராயம் என்ற அரக்கனுக்கு பலியாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசு இன்றைக்கு காவல்துறையினர் சிலர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல்துறை இதுநாள் வரை தூங்கி கொண்டு இருந்ததா? இத்தனை உயிர்களை காவு கொடுத்த பிறகுதான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மிகவும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

ஒரு சில காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதுமா? திமுக தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, இன்றைக்கு அப்பாவி உயிர்கள் போனபிறகு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்வது யாரை ஏமாற்றும் செயல்? இதுபோன்ற சமூக விரோத செயல்களில் திமுகவினரும் இருப்பதாக தெரியவருகிறது. எனவே, இது போன்ற நாடகங்களை மக்கள் ரசிக்கமாட்டார்கள்.

தமிழக மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிடமுடியாது என்பதை திமுகவினர் இனிமேலாவது புரிந்துகொண்டு மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுங்கள். அதுதான் வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற நன்றிக் கடனாக அமையும்.

எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களை மேலும் மேலும் துன்புறுத்துவதை விட்டு விட்டு, இனிமேலாவது அவர்களின் நலனுக்காக பாடுபடுங்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்