மக்களே…இன்றைய பெட்ரோல்,டீசல் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 2 வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்தது.
மேலும்,நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியதையடுத்து,பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.
இதனால்,சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 2 வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி,ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43 விற்பனை செய்யப்படுகிறது.