சீமான் – திமுக இடையே நிலவும் மோதலை முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செய்த செயலை மக்கள் வரவேற்கவில்லை. இதற்கு பிரதிபலமாக திமுகவினர் மேடையில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன் பிறகு தனக்கு கருத்து சுதந்திரம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டுதல், வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். இது அனைத்தும் நான் அரசியலாக தான் பார்க்கிறேன் என்றும் இதில் சொல்வதற்கு எதுவும் கிடையாது எனவும் சீமான்- திமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
இது முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன். தங்களை அடையாளப்படுத்தி கொள்ளவும், தங்களை வெளியில் காண்பித்துக் கொள்ளவும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்குமுன் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…