அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்…!அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
7 பேர் விவகாரம் குறித்து ரஜினி தெரியாது என அளித்த பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்று கூறியது தரம் தாழ்ந்த கருத்து கிடையாது.ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கருத்துக்களை மாறி கூறுபவர்களுக்கு தான், நான் கூறியது பொருந்தும்.எந்தக் கட்சி எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.குரூப் 2 தேர்வில் பெரியார் குறித்த கேள்வி தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.