ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை – சீமான்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில் ,தெலங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப் பட்டதை மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.சட்டரீதியாக அணுகினால் உடனடியாக நீதி கிடைக்காது. எனவே இது போன்ற பிரச்சனைகள் வரும் போது உடனடியாக தண்டனை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா போன்ற இத்தனை பெரிய நாட்டில் ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது அவமானமாக உள்ளது. நான் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு உண்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்வது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தயாராக இருக்கிறது,உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.சிதம்பரம் ஜி.எஸ்.டி பற்றி பேசக்கூடாது ஏன் என்றால் அதை கொண்டு வந்ததே அவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.