ஊழல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் – அண்ணாமலை
எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்தக் கார் இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் சொன்னார். எந்த கார் வைத்துள்ளார் என்பதை சொல்வோம் என தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் ஒரு மாத காலத்தில் மக்களுக்கு, டோல் ஃபிரீ நம்பரும், வெப்சைட்டும் கொடுக்க போகிறோம். அதில் மக்கள் திமுகவின் பினாமி சொத்துக்கள் இருப்பதாக தெரிந்தால் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.