உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க.வின் இந்த வெற்றி குறித்து குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளர். அவர் தனது பதிவில் மக்கள் பா.ஜ.க. உடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. கட்சி மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதுவும் தடுக்க முடியாது.
இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்துவிட்டது. மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். பா.ஜ.க.வில் உள்ள நாங்கள் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்.
வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தனர். கடுமையாக உழைத்த அனைத்து தன்னார்வலர்களும், செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நரேந்திர மோடி ஜி, நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…