மக்களே ஜாக்கிரதை…! தமிழகத்தில் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 139 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.