மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8:30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இந்த 3 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025