சென்னை சவுகார் பேட்டை நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ப்ரியா அகர்வால்(21) ஒரு கல்லூரி மாணவி ஆவார். இவர் நேற்று காலை மிகுந்த பசியினால், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட, தனது செல்போனில் பிரியாணி கடையை தேடியுள்ளார். அவர் தேடலில் கிடைத்த, வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்து, உபர் ஈட்ஸ் என்ற இணையதளம் மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
இதற்காக அவர், ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், பணப்பரிமாற்றம் செய்து சிறிது நேரத்திலேயே, ஆர்டர் கேன்சலாகி விட்டது, இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ப்ரியா, உபர் ஈட்ஸ்-ன் சேவை என்ணை தொடர்பு கொண்டு தனது 76 ரூபாயை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர், 76 ரூபாயை தனியாக திரும்ப தர இயலாது. எனவே ரூ.5,000 செலுத்துங்கள். 5,076 ரூபாயாக திரும்பவும் உங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக தெரிவித்துளளார். இதனை நம்பி, ப்ரியாவும் ரூ.5 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பாக மீண்டும் அந்த இணைய சேவை எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர்கள், பணம் கிரெடிட் ஆகவில்லை. மீண்டும் 5,000 ரூபாய் செலுத்துங்கள் என்று கூற, ப்ரியாவும் மீண்டும் பணத்தை செலுத்தியுள்ளார்.
பணம் வரவில்லை என மீண்டும், மீண்டும் அவர்கள் கூற, தனது வாங்கி கணக்கில் 8 முறை 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். இப்படியே அனுப்பி அவர் 40 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். அதன் பின் அந்த சேவை எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் தான், அவருக்கு தெரிந்துள்ளது இந்த சேவை எண் பொய்யானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார். இதனையடுத்து, ப்ரியா வடபழனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…