நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, இடுப்பு பகுதிகளில் ரத்தக்காயமும், உடல் முழுவதும் வீக்கமும் ஏற்பட்டது. பின்னர் லிங்கத்தை வேட்டைக்காரனிருப்பு போலீசாஸாரிடம் லிங்கத்தை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீஸார், உடனே நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…