7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.
சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 25 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்தனர்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் நடத்திய விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சிறுமியின் பிரேத பரிசோதனை வெளியானது.வெளியான அறிக்கையில், கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.அதேபோல் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் போலீசார் வழக்கு விசாரணையை தொடர்ந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று கைதான சந்தோஷ் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்து திரும்பிய போது கைதான சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் காவல்த்துறை அவரை வேனில் ஏற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…