மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் : அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட குலையன்கரிசல் போடம்மாள்புரம், கூட்டாம்புளி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மக்கள் ஆட்சியின் மீது நல்ல எண்ணத்தில் இருக்கின்றனர் என்றும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை அதிமுக அரசு விரைவில் நிறைவேற்றி கொடுக்கும் என்றும், மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரச்சாரத்தை 3 நாட்களாக அதிகரித்ததில் அவருடைய பயம் வெளிப்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.