சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – கமல்ஹாசன்!
வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தை துவங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், முதல்கட்டமாக மதுரையில் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள், அதன் பிறப்பதாக விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் முன்பதாக பேசிய கமலஹாசன் அவர்கள் திரண்டு இருக்கும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும் ஆசியும் மீண்டும் மீண்டும் எனக்கு கூறுகிறது. இங்கு கூடியிருக்க கூடிய தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்து கூறினாலே போதும். நாளை நமதே, நம் கதை தொடங்கும், அவர்கள் கதை முடியும் என கூறியுள்ளார். மேலும் இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்துக்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும் எனவும், மக்கள் நீதி மையம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொது மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும் எனவும் ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே என அவர் கூறியுள்ளார்.