குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மக்களுக்கு அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025