சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் – முதல்வர் பழனிசாமி

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ .8,000 முதல் ரூ .8,5000 வரை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.