இவர்களுக்கு மட்டும் மாதம் ரூ.30,000 ‘ஓய்வூதியம்’… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.!!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25,000- லிருந்து ரூ. 30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அதைப்போல, மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மேலவை உறுப்பினர்கள் மருத்துவபடி ரூ,50,000 லிருந்து ரூ.75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500 என்பது, மாதம் ஒன்றிற்கு ரூபாய் ரூ. 15 ,000 ஆகா உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.