நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் அதிகரித்து வருகின்றது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதனால்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும் என்றும்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,மதுரையில் பொதுஇடங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும்,இதனை மீறினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…