இன்று முதல்…பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு

Default Image

நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால்  அதிகரித்து வருகின்றது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனால்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும் என்றும்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,மதுரையில் பொதுஇடங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும்,இதனை மீறினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்