தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!
தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு.
கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.