சுய ஊரடங்கு நாளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பாட்டம் போட்டவர்களுக்கு அபராதம்!

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்தியா முழுவதும், சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டமாக உற்சாகமாக குளித்துக் கொண்டும், கரையில் அமர்ந்து பேசிக்கொண்டுமிருந்தனர். உடனடியாக அவர்களை அழைத்து குடும்பமாக வந்தவர்களை எச்சரித்துள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதமும் விதித்தும் அனுப்பி வைத்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்