வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர், ஆகியவற்றினுடைய பெயர்களை ஸ்டிக்கர்காளாக அடித்து வருவது அதிகமாகி இருக்கிறது. இதனை பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது பலரும் இந்த துறையில் இல்லாமலே இது போன்று ஸ்டிக்கர்கள் அடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது.
எனவே, இதனை தடுக்கவேண்டும் என்பதால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதனையடுத்து, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினாலும், அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டனாலும் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்து இருக்கிறது.
எனவே, இனிமேல் தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்காத அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டவே கூடாது எனவும், அப்படி இதனை மீறியும் ஓட்டினால் அதற்கு அபராதமும் உண்டு எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தது என்றால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். இருப்பினும். அந்த செய்தி நிறுவனத்தின் அரசு அங்கீகாரம் செய்த அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதைப்போல, மற்ற துறைகளிலும் இருப்பவர்களும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம் அவர்களும் அதற்கான அடையாள அட்டை கண்டிப்பாக வைத்து இருக்கவேண்டும்.
விதிகளை மீறி துறையில் இல்லாமல் ஸ்டிக்கர் ஓட்டினாலும். நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினாலும் முதல் முறை விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை என்றால் ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்த உள்ளதாகவும், காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.