கடலில் பேனா சின்னம் – சுற்றுச்சூழல் அறிக்கையை தாக்கல் செய்தது தமிழக பொதுப்பணித்துறை.!

Default Image

பேனா சின்னம் அமைப்பது குறித்த சுற்றுச்சூழல் அறிக்கையை தாக்கல் செய்தது தமிழக பொதுப்பணித்துறை.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பேனா சிலை அமைபப்து தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பி இருந்ததால், இது குறித்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கவேண்டி இருந்தது. இந்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்தது.

தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய ஒப்புதலை அடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்துள்ளது. மேலும், விரைவில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளது.

கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரையின் படி அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதமும் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்