மெரினாவில் பேனா சிலை விவகாரம்.! தனது பதிலை கூறிய ஓபிஎஸ்.!
பேனா சிலை நிறுவப்படும் இடம் எப்படிபட்ட இடம் என ஆய்வாளர்களிடம் கேட்டுள்ளேன். அவர்களின் ஆய்வு முடிவுகள் வெளியான உடன் நான் எனது கருத்தை கூறுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே 34 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட பேனா சிலையை நிறுவுவதற்கான வேலைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு கருத்து கேட்பு கூட்டம் கூட அண்மையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடத்தப்பட்டது.
பேனா சிலை அமைக்க ஆதரவும் , எதிரிப்பும் கலந்து வந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பேனா சிலை நிறுவப்படும் இடம் எப்படிபட்ட இடம் என ஆய்வாளர்களிடம் கேட்டுள்ளேன். அதே போல, அந்த சிலை அமைந்தால், மீன் வளம் பாதிக்கப்படுமா என்பது பற்றியும் கேட்டுள்ளேன்.
மேலும், அந்த சிலை நிறுவப்பட்டால், சுற்றியுள்ள மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்பது பற்றிய கருத்தையும் நான் கேட்டுளேன். மேலும், மீனவர்கள் சங்கங்களில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் நான் கேட்டுள்ளேன். அவர்களின் நிலைப்பாடு தெரிந்ததும், எங்கள் தரப்பில் இருந்து அதிமுக நிலைப்பாட்டை அறிவிக்கிறேன் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.