மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடலுக்கு நடுவே பேனா சிலை அமைப்பது தொடர்பான தென் மண்டலா பசுமை தீர்ப்பாயத்தில் எந்தெந்த துறைகள் என்னென்ன கருத்துக்கள் தெரிவித்து உள்ளன என்பதை பார்க்கலாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பும் , ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடம் குறித்தும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, மத்திய மாநில அரசுகள் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள 14 துறைகளிடம் இந்த பேனா சிலை அமைப்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பிறகு கடந்த 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, பதில் விளக்கம் கேட்கப்பட்டிருந்த 14 துறைகளில் 2 துறைகளில் இருந்து மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ள துறைகளில் இருந்து விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழக பொதுப்பணித்துறை மட்டுமே பேனா சிலை அமைப்பது தொடர்பாக பதில் அளித்துள்ளனர். அதில் தமிழ் வளர்ச்சி துறையானது, சென்னை மெரினாவில் உரிய அனுமதியுடனே தலைவர்கள் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவும், மெரினாவிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட பகுதியானது இடுகாட்டுப்பகுதி எனவும் விளக்கம் அளித்து இருந்தது.
அதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் கொடுத்த விளக்கமும் வெளியாகியுள்ளது. அதில், பொதுப்பணித்துறை சார்பில், தேவையான அனைத்து மத்திய மாநில துறைகளிடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கேட்கப்பட்ட அனைத்து துறைகளிலும் அனுமதி கொடுத்த பின்னர் தான் பேனா சிலை அமைப்பது தொடர்பாக வேலைகள் நடைபெறும்.
இந்த பேனா சிலையானது, கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650மீ தொலைவிலும், கடலுக்கு நடுவே 350 மீ தொலைவிலும் அமைய உள்ளது. 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பேனா சிலை அமைக்கப்பட உள்ளது. என தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திடம் தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…