பேனா நினைவு சின்னம் – இன்று கருத்து கேட்பு!
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
கலைஞர் நினைவிட பேனா நினைவு சின்னம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. பேனா நினைவு சின்னம் குறித்த சுற்றுசூழல் அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள் பங்கேற்கின்றன. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கானபொதுமக்கள் காருத்துகேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது.
பேனா நினைவு சின்னம் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை, மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.