கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய சீமானுக்கு, ஓபிஎஸ் கண்டனம்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழங்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார். பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் தனி சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும்.
மேலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நினைவு சின்னம் வைத்துள்ளதால், கலைஞருக்கு நினைவு சின்னம் வைப்பது பற்றி பொதுவாக எதுவும் கூற முடியாது. பேனா சின்னத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியான பிறகே அது குறித்து கருத்து கூறப்படும் எனவும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…