உச்சம் தொட்ட மின் தேவை.! அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் தகவல்.!

Default Image

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு  அதிகபட்சமாக நுகர்வு 40 கோடி யூனிட்கள் கடந்த 13-ஆம் தேதி பயன்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது, அதனை தொடர்ந்து (18ஆம் தேதி) நேற்று வரலாற்றில் முதன்முறையாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டு மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது குறித்த தகவல் ஒன்றை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது “தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 18/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 13/04/2023ல், 40 கோடி யூனிட்கள் ஆகும்.

மெகாவாட் அளவில், நேற்று 18/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 18,882 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 13/04/2023ல் 18,667 MW ஆகும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்