மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பி நியமனம்!
மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதன்படி, மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், மதிமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசைத்தம்பி விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.