முதல்வர் மு.க.ஸ்டாலின் தைரியமானவர்.! மனதில் உள்ளதை பேச மனவலிமை வேண்டும்.! பி.சி.ஸ்ரீராம் புகழாரம்.!
பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு மன வலிமை வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார். – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்று கிழமை அன்று திமுக பொதுக்குழுவில் பேசிய கருத்துக்கள்அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசுகையில், எந்த தவறு நடந்தாலும் என்னை தான் குற்றம் சொல்வார்கள். பல்முனை தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பக்கம் முதலமைச்சர் பொறுப்பு இன்னோர் பக்கம் திமுக தலைவர் பொறுப்பு மத்தளத்திற்கு இரு பக்கம் இடி போல இருக்கிறது எனது வாழ்க்கை.
அப்படி இருக்கும் என்னை மென் மேலும் துன்படுத்தும் விதமாக நிர்வாகிகளின் செயல்பாடுகள் இருக்க கூடாது என மனம் விட்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு எதிர்கட்சியினரிடையே விமர்சனம் செய்யப்பட்டது.
அதே போல பலரும் முதல்வர் ஸ்டாலின் மனம் விட்டு தைரியமாக பேசினார் என பாராட்டவும் செய்தனர். அப்படி தான் இந்திய சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், ‘ பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு மன வலிமை வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார்.
இவரின் மனம் திறந்த பேச்சும் , பயமற்ற மனநிலையில் அவரது வலிமையை காட்டுகிறது. அவரது பேச்சால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிமிர்ந்து நிற்கிறார். ‘ என டிவீட் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
#MKStalin
To speak ones mind in public needs a strong mind . Mr @mkstalin has gone one step further to speak the truth to all . This is shows his strength in today’s world of direct communication & being open & fearless .He stands tall .— pcsreeramISC (@pcsreeram) October 13, 2022