நிபுணர்குழு போலீஸ் பிரச்சனைகளைத் தீர்க்க அமைக்காதது ஏன்?
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை? என கண்டனம் தெரிவித்துள்ளது.
சுப்பு என்ற ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரம் எவ்வளவு என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை என அரசு பதில் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. காவலர்களின் மன உளைச்சல் காரணமாகவே தங்களது கோபத்தை வெளிப்படுத்த அப்பாவிகளை அடிப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். நிபுணர் குழு பட்டியலை வியாழக்கிழமை சமர்ப்பிக்காவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.