உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்துங்கள்- ஈபிஎஸ்..!
உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து முழுமையாக கவனம் செலுத்தி களப்பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சென்னையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை இதனால், சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.