Honor killing - Pattukotai [File Image]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவரும் திருபூரில் ஒன்றாக வேலை செய்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர்.
36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..! 4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.!
இதனை அறிந்து ஐஸ்வர்யா பெற்றோர்கள் ஜனவரி 2ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்நிலையத்தில் ஐஸ்வர்யாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவை காவல்துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு அடுத்த நாளே ஐஸ்வர்யா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி நவீனுக்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, வாட்டாதிக்கோட்டை காவல்நிலையத்தில் நவீன் புகார் அளித்துள்ளார் . முதலில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் பதிவு செய்து இருந்த காவல்துறையினர், நவீன் புகாரை அடுத்து, ஐஸ்வர்யா மற்றும் நவீன் வேற்று சமூகத்தினர் , காதலுக்கு கடும் எதிர்ப்பு, காவல்துறையினர் வருவதற்குள் ஐஸ்வர்யாவின் சடலத்தை சுடுகாட்டில் எரித்த செயல் போன்ற காரணங்கள் அடிப்படையில் ஆணவக்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து 11 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது முதற்கட்டமாக ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா ஆகியோரை கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…