பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர் – தவெக தலைவர் விஜய்!

மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

pasumpon muthuramalinga thevar vijay

சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள்.

அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். அதில் ” அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர்.

சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என விஜய் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்