பசும்பொன்: தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பார்த்தவர் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை பேட்டி!

ANNAMALAI

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவானது, பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. காலை முதலே முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை அணிவித்து தனது மரியாதை செலுத்தினார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார்.

மரியாதை செலுத்திவிட்டு அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைய  மகவும் படுபட்டவர் என்று முத்துராமலிங்க தேவர் குறித்து பேசினார்.  அப்பொழுது அவர் பேசுகையில், கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தேவர் புகழை பேசியதை பற்றி எடுத்துரைத்தார் .,

தேவர் எப்படிப்பட்ட மாமனிதர், ஒரு தேசியவாதி, நாம் நாட்டுக்காக பாடுபட்டவர், சமுதாயத்துக்காக ஒற்றுமைக்காக பாடுபட்டவர். தேயமும் ஆன்மிகவும் தன்னுடைய இரு கண்கள் என தேவர் ஐயா பேசியதை மிக பெருமையாக பேசியதாக கூறினார்.

முத்துராமலிங்க தேவர் நினைவாக திமுக செயல்படுத்திய திட்டங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

இது குறித்து தனது X  தள பக்கத்தில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜாக மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.

முத்துராமலிங்க தேவர் சிலை மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு முத

தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்