பாஸ்போர்ட் ஊழல்.. ஆளுநரிடம் அறிக்கை தர உள்ளோம் – அண்ணாமலை
பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவிப்பு.
பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை வரும் 21-ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் வழங்க உள்ளோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஸ்போர்ட் ஊழலில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன என்பதை தெரிவிக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை, இதனால் ஆளுநரை சந்தித்து பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், பாஸ்போர்ட் ஊழலில் யாரையோ காப்பற்ற நடவடிக்கையை முதலமைச்சர் தாமதிப்பதாகவும், மக்கள் வெறுப்பை மறைக்க ஆளுநரை வம்புக்கு இழுத்து அரசியல் செய்கிறது திமுக எனவும் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் தேச பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்றும் இது மிகப்பெரிய குற்றம் எனவும் கூறினார். பாஸ்போர்ட் பெற்ற 200 பேரில் பெரும்பாலானவர்கள் கிரிமினல், மதுரையை மையமாக வைத்து காவல்துறை உதவியுடன் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார்கள் எனவும் குற்றசாட்டினார்.