தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்…!
தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தற்போது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இரவு 12.30 மணிக்கு கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்து பின் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது.தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல் என்று தெரிவித்துள்ளது.