இது என்ன கொடுமை..பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள்..! வைரலாகும் வீடியோ..!
பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வள்ளியூர் அருகே நேற்று பெய்த மழையில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் மழைநீர் பேருந்துக்குள் கசிந்துக் கொண்டிருந்தது.
இதனால், அந்த பேருந்தில் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு பயணித்தனர். அவர்கள் குடை பிடித்துக்கொண்டு பயணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Rainwater leakage in Tirunelveli- Nagercoil TNSTC bus near Valliyoor on Saturday evening pic.twitter.com/3kFBaTEKbx
— Thinakaran Rajamani (@thinak_) April 30, 2023