பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே மதியம் 1.20 மாலை 5.20 வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

சென்னை : பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, மொத்தம் 16 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:
- ரயில் எண் 42413: மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் (MMC) – சூலூர்பேட்டை EMU லோக்கல்
- ரயில் எண் 42013: மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல்
- ரயில் எண் 42015: மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல்
- ரயில் எண் 42415: மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – சூலூர்பேட்டை EMU லோக்கல்
- ரயில் எண் 42603: சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல்
- ரயில் எண் 42017: மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல்
- ரயில் எண் 42605: சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல்
- ரயில் எண் 42022: கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல்
- ரயில் எண் 66030: சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் MEMU பயணிகள் ரயில்
- ரயில் எண் 42414: சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல்
- ரயில் எண் 42024: கும்மிடிப்பூண்டி – சென்னை பீச் EMU லோக்கல்
- ரயில் எண் 42026: கும்மிடிப்பூண்டி – சென்னை பீச் EMU லோக்கல்
- ரயில் எண் 42028: கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல்
- ரயில் எண் 42416: சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல்
- ரயில் எண் 66036: நெல்லூர் – சூலூர்பேட்டை MEMU பயணிகள் ரயில்
- ரயில் எண் 42606: கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல்
மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண் 42501: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி EMU லோக்கல் -,புறப்படும் நேரம்: 09:55 மணி
- ரத்து செய்யப்பட்ட பகுதி: சென்னை பீச் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைய
- அதாவது, இந்த ரயில் செங்கல்பட்டு முதல் சென்னை பீச் வரை மட்டுமே இயங்கும், சென்னை பீச்சில் இருந்து கும்மிடிப்பூண்டி வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 42522: கும்மிடிப்பூண்டி – தாம்பரம் EMU லோக்கல் –புறப்படும் நேரம்: 15:00 மணி
- ரத்து செய்யப்பட்ட பகுதி: கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை பீச் இடைய
- அதாவது, இந்த ரயில் சென்னை பீச்சில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயங்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை பீச் வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக, பின்வரும் சிறப்பு ரயில்கள் விவரங்கள் பின்வருமாறு:
- மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – பொன்னேரி – புறப்படும் நேரம்: 10:30 மணி
- மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – மிஞ்சூர் -புறப்படும் நேரம்: 11:35 மணி
- பீச் – பொன்னேரி – புறப்படும் நேரம்: 12:40 மணி
- மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – மிஞ்சூர் – புறப்படும் நேரம்: 13:40 மணி
- சென்னை பீச் – பொன்னேரி – புறப்படும் நேரம்: 14:40 மணி
- பொன்னேரி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – புறப்படும் நேரம்: 13:18 மணி
- மிஞ்சூர் – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் -புறப்படும் நேரம்: 14:59 மணி
- பொன்னேரி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – புறப்படும் நேரம்: 15:53 மணி
- மிஞ்சூர் – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – புறப்படும் நேரம்: 16:14 மணி
- எண்ணூர் – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் -புறப்படும் நேரம்: 17:12 மணி
Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Gudur section between #Kavaraipettai and #Ponneri Railway Stations on 20th March 2025.
Passengers, kindly take note.#RailwayAlert pic.twitter.com/dnB8Rho7qK
— DRM Chennai (@DrmChennai) March 20, 2025