காவிரி விவகார தனித்தீர்மானம் நிறைவேற்றம்.! சட்டப்பேரவை இன்றைய நாள் நிறைவு.!

TN Assembly

2023-24 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்வதற்காகவும், பிற முக்கிய நிகழ்வுகளுக்காகவும் இன்று (அக்டோபர் 9) தமிழக சட்டப்பேரவை துவங்கியது. இதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

தனித்தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் இறுதியாக திமுக, அதிமுக, பாமக என கட்சி பேதமின்றி பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! தனி தீர்மானத்தில் முதல்வர் கூறிய முக்கிய குறிப்புகள்…

இந்த தீர்மானம் முழுதாக இல்லை என கூறி பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததாகவும், நாளை காலை மீண்டும் சட்டப்பேரவை துவங்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த சட்டப்பேரவை தொடரானது வரும் அக்டோபர் 11ஆம் தேதி (நாளை மறுநாள்) வரையில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் மறைந்த முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்