தமிழ்நாடு

சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்.. சட்டப்பேரவை ஒத்திவைப்பு..!

Published by
murugan

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காமல் நிலுவையில் இருந்தது. இந்த மசோதாக்கள் அனைத்தும் கடந்த 13-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு திருப்பி  தமிழக அரசுக்கு அனுப்பினார்.

இந்த சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும்  மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பின்னர், தமிழக முதல்வர் கொண்டு வந்த 10 தீர்மானங்கள் தொடர்பான தனிதீர்மானம் மீது திருப்தியில்லை அதனால் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆளுநரின் செயல்பாடு, பல்கலை.துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றி விட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.

“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” – அதிமுக மீது துரைமுருகன் விமர்சனம்..!

பின்னர், சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக  சபாநாயகர் அப்பாவு  அறிவித்தார். ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த சட்ட மசோதாக்கள் மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Published by
murugan
Tags: #TNAssembly

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

7 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

9 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

12 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

12 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

13 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

13 hours ago