சமூக வலைத்தளம் மூலம் ஒன்று சேர்ந்து போதைப்பொருட்களுடன் பார்ட்டி.! வளைத்து பிடித்த காவல்துறை.!
சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல் மூலம் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று கொடைக்கானல் இங்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்த வகையில் சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் போதையுடன் கூடிய இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தென் மண்டல காவல் தலைவர் சண்முகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையறிந்த காவல்துறை 3 துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்ட்டியில் ஈடுபட்டிருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை பொருட்களான போதை காளான், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.