இடைத்தேர்தலில் களமிறங்கிய அமமுக.! வேட்பாளரை அறிவித்த டி.டி.வி.தினகரன்.!

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் என்பவர் போட்டியிட உள்ளார் என அக்கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளறை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக அதிமுக இருப்பதால் யார் போட்டியிடுவார்கள் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது.

அடுத்ததாக தேமுதிக சார்பில் வேட்பாளர்களை அக்கட்சியின் மூத்த நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதேபோல தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தற்போது தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் என்பவரை தங்கள் கட்சி வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும், அவர் குறிப்பிடுகையில், அம்மா ஜெயலலிதா – தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்த நிர்வாகிகள் தான் தற்போது எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

மேலும், அவர் கூறுகையில் எங்களது கட்சி ஓர் கட்டுக்கோப்பான கட்சி. இங்கு 33 வார்டுகளில் நிர்வாகிகளை அமைத்து அவர்கள் சரியாக இயங்கி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் நாங்கள் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ளோம். எங்களது தேர்தல் பணி குழுவை விரைவில் அறிவிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அம்மாவின் தொகுதியில் நான் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். அதே நம்பிக்கையோடு இம்முறையும் போட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சில கட்சிகளிடம் நாங்கள் ஆதரவு கேட்டு வருகிறோம். அது பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

சசிகலா பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிடிவி தினகரன் கூறுகையில், சசிகலா அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா. அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வாரா என்பது அவர்களுக்கு தான் தெரியும். அதுபோல இரட்டை இலை சின்னம் என்பது குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆதலால், இரண்டு பேருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலை தான் வரும் என கருதுகிறேன். என தனது கருத்தையும் டிடிவி.தினகரன் முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்