“மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் ” – பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி
“மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் ” என்று நேற்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர் .இதன் பின் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் குஷ்பு.அப்பொழுது, அவர் கூறுகையில், மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது “. 6 வருடங்களாக கட்சியில் இருந்த பின் தான் நடிகை என அவர்களுக்கு தெரிகிறது.அங்கு இருப்பவர்களுக்கும் மரியாதை இல்லை வெளியே போனவர்களுக்கும் மரியாதை இல்லை.”திமுகவில் இருந்து வெளியே வந்த பின்னும் சரி, காங்கிரஸ் இருந்தி வெளியே வந்த பின்னும் நான் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை.எல்.முருகன் எடுத்துள்ள முயற்சியால் நான் பாஜகவில் இணைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.