திமுக கூட்டணியில் தொகுதிகள் குறித்த விபரம் வெளியீடு!!வேட்பாளர்களை அறிவித்த கூட்டணி கட்சிகள்!!

Published by
Venu
  • திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியாகியுள்ளது.
  • திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு  எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படுவதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.பின்னர்  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி ஆகும்.

மக்களவை தேர்தலில் ஈரோட்டில் மதிமுக போட்டியிடுகிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்  சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகும். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது.

 

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி கோவை மற்றும் மதுரையில் போட்டியிடுகிறது.இந்திய கம்யூனிஸ்ட்  திருப்பூர் மற்றும் நாகையில் போட்டியிடுகிறது.நாமக்கலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது என்று திமுக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகும்.

தொகுதி விவரத்திற்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறோம் .அதுபோல் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுவார்  என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago