கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி!!இன்று அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை !!பன்னீர்செல்வம்
- தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
- இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.பின்னர் ஒருவழியாக அது முடிந்து தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.